Sunday 22 January 2017

யாரிந்த சின்னிப்பரா

Leave a Comment
PETA மற்றும்  தரங்கெட்ட மீடியாவால் மறைக்கப்பட்ட இன்னொரு வன்மம்.

சிப்பிப்பாறை என்கிற வார்த்தை நீங்க கேட்டது இல்லை என்றால் சிரமம் பார்க்காமல் இதை முழுதும் படியுங்கள் தமிழர்களே.

இது போன வருடமோ இல்லை அதற்கு முன்போ நடந்தது இல்லை. போன மாதம் DEC 16 2016 .

நம் தமிழ் இன காளைகளை போல் இன்னும் ஒரு இனம் தமிழகத்தில் தனித்துவம் பெற்றது உண்டு. அது நம் மண்ணின் நாய்கள் இனம். அதை PETA முற்றிலுமாக அழித்து விட்டது என்றே சொல்லலாம்.

நம்மை போன்ற படித்த மக்களுக்கு தெரிந்தது எல்லாம் PUG, LABRADOR, GERMAN SHEPHERD போன்ற அந்நிய நாட்டு நாய்கள் தான். இத படிக்கும் எத்தனை பேருக்கு தெரியும் நம் மண்ணின் நாய்கள் சிப்பிப்பாறை, கன்னி,  கோம்பை மற்றும்  ராஜபாளையம். நம் இன நாய்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு.

சிப்பிப்பாறை - நம் முன்னோர்கள் வேட்டை ஆட பயன்படுத்துவார்கள் வீட்டிற்கு சிறந்த காவலன். Hare என்கிற முயலை விட வேகமாக ஓட கூடியது. மனிதர்களுடன் நேசம் பழகுவது இதற்கு மிகவும் பிடிக்கும். https://en.wikipedia.org/wiki/Chippiparai

கன்னி - இது உரிமையாளருக்கு மிகவும் உண்மையாக இருக்கும். சுயமாக சிந்திக்க கூடிய திறன் படைத்தது. ஆகையால் பழகுவது மிகவும் எளிது. முன்பு பெண் வீட்டார் பெண்ணுக்கு சீதனமாக கன்னியை பரிசளிப்பார்கள். https://en.wikipedia.org/wiki/Kanni

கோம்பை - பண்ணை காவலன். தனி ஒருவனாக காவல் காப்பார் இவர். இவரை மீறி எந்த மிருகமும் கிட்ட நெருங்க முடியாது. காட்டுஎருமையை வேட்டையாடும் திறன் படைத்தவர். https://en.wikipedia.org/wiki/Combai

ராஜபாளையம் - உரிமையாளருக்கு மிகவும் விசுவாசமானது. உரிமையாளர் தவிர வேற யாரும் தொட விடாது. 75cm உயரம் வரை வளர கூடியது. https://en.wikipedia.org/wiki/Rajapalayam_(dog)

இந்த நான்கு இனங்களும் அழிந்து போகும் தருவாயில் இருக்கிறது. இந்த இனங்களை மீட்டு எடுத்து  பாதுகாக்கவும், அழிவை தடுக்கவும் தமிழ்நாடு அரசு "நாய் வளர்ப்பு பிரிவு" சைதாப்பேட்டை யில் இயங்கி வந்தது. இவர்கள் நம் இன நாய்களை இனவிருத்தி செய்து அழியாமல் பாதுகாத்து வந்தனர். யார் வேண்டுமானாலும் இங்கு சென்று நம் இன நாய்களை வாங்கி வளர்க்கலாம்.

PETA 4th Aug 2014 தமிழ்நாடு உயர் நீதி மன்றத்தில் இந்த நாய் வளர்ப்பு கூடத்தில் நாய்கள் கொடுமைப்படுத்த படுகிறது. ஆதலால் இக்கூடத்தை AWBI ஆய்வு செய்து அவரகள் பரிந்துஉரைத்தால் இக்கூடத்தை மூட வேண்டும் என்று மனு செய்கிறது. இதற்கு மேல் என்ன நடந்தது என்று உங்களால் ஊகிக்க முடியும். PETA கைப்பாவை AWBI ஆய்வு செய்து "நாய் வளர்ப்பு கூடத்தை " மூட பரிந்துஉரைத்தது. அதன்படி உயர் நீதி மன்றம் Dec 16 2016 அன்று நம் இன நாய் வளர்ப்பு கூடத்தை மூட உத்தரவிட்டது. PETA அமைப்பு அங்கு நாய்கள்  கொடுமைப்படுத்த படுகிறது என்று உயர் நீதி மன்றத்தில் கொடுத்த ஆதாரம் இதுதான். 


இதை பார்த்து விட்டு சொல்லுங்கள் இதில் எங்கே நாய்களை கொடுமைப்படுத்துகிறார்கள்?

ஏன் இதை எந்த தமிழ் மீடியாவும் நமக்கு சொல்லவில்லை?

வெறும் சில நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணவேண்டிய பிரச்சனைக்கு எதற்காக உயர் நீதி மன்றம் முற்றிலுமாக மூட சொல்லியது?

PETA  எதற்காக இந்த நாய் வளர்ப்பு கூடம் மூட இவ்வளவு சிரத்தை எடுத்தது?

பலபேர் யோசிப்போம் இதனால் PETA விற்கு என்ன லாபம் என்று. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. நம் நாட்டு நாய்களுக்கு தனியாக உணவு தேவை இல்லை. நம் சாப்பிடும் உணவே அதற்கும் போதும். எளிதாக நோய்கள் அண்டாது. முடி உதிரும் தன்மை கிடையாது. அப்புறம் எப்படி அவர்கள் சம்பாதிக்க முடியும்? வெளிநாட்டு நாய்கள் நம் உணவு சாப்பிடாது அதற்கென்று தனி உணவு சூப்பர் மார்க்கெட் ல வாங்கணும். அதை பராமரிக்க மருந்துகள் வாங்க வேண்டும். இவை அனைத்தும் வெளிநாட்டு கார்பொரேட் கம்பெனிகளால் இங்கு விற்கப்படுகிறது. இப்போது புரிந்ததா? மேலும் படியுங்கள்.

எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. PETA என்கிற வெளிநாட்டு அமைப்பின் ஒரே குறிக்கோள் நம் சொந்த மண்ணின் இனத்தை அழித்து அவர்களின் தயாரிப்புகளை நம் மண்ணில் இறக்குவது தான். இன்னும் சற்று உற்று யோசித்து பாருங்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நம் பாரம்பரிய இனங்களை அழித்தால் போதும். 

மக்களே விழித்து கொள்ளுங்கள். PETA அமைப்பு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் சரியே. அவர்கள் நம் நாட்டின் விஷம். இப்போதே அவர்களை விரட்ட வேண்டும். PETA வை ஒழிப்பது மட்டும் இன்றி நம் நாட்டு நாய்களையும் காப்பாற்ற வேண்டும். 

நான் ஆராய்ந்ததில் ஆபிரகாம் என்பவர் இந்த "நாய் வளர்ப்பு கூடத்தை" பராமரித்து வந்து இருக்கிறார். அவரை முதலில் தொடர்பு கொண்டு முழு விவரத்தையும் அறிய வேண்டும். வழக்கை மேல் முறையீடு செய்து இக்கூடத்தை மீண்டும் திறக்க வேண்டும். தமிழரகளே நம் இனத்தின் ஒரு புள் பூண்டை கூட அழிய விடாமல் காப்பது நம் கடமை. விழித்திரு தமிழா.

இதை நம் தமிழர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

#weneedjallikattu #savetamilbreeds
If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments:

Post a Comment