Saturday 11 June 2016

சிம் கார்டு குளோனிங் : மாட்டுனா 'மாவு கஞ்சி' தான்.!

Leave a Comment
காலம் போகும் போக்கை பார்த்தால் எதுவும் மிஞ்சாது போலிருக்கின்றது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை ஹேக்கர்களும் கையில் எடுத்து கொண்டுள்ளனர். இம் முறை நமது சிம் கார்டு மூலம் நமக்கே தெரியாமல் ஆப்பு வைக்க ஹேக்கர்கள் காத்திருக்கின்றனர்.

சிம் கார்டு குளோனிங் எனப்படும் புதிய ஊழலில் சிக்கியவரின் அனுபவம், மற்றும் நீங்களும் இந்த ஊழலில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 

fuzcPp8.jpg

மூத்தவர்

மும்பையை சேர்ந்த 72 வயதான பெண்மனி தான் சிம் கார்டு குளோனிங் ஊழலில் சிக்கினார். தனது வங்கியில் இருந்து 11 லட்சம் எடுக்கப்பட்டதாக தனக்கு வந்து குறுந்தகவல் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார். 

n7rHnKp.jpg

ஊழியர்

இந்த பெண்மனி முன்னதாக அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வந்தவர் என்பதோடு ஹேக்கர்கள் இவரின் கிரெடிட் கார்டு தகவல்களை கொண்டு ரூ.11 லட்சத்திற்கு விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


முதலில் ஹேக்கர்கள் இவரின் சிம் கார்டினை குளோன் செய்து, வங்கியிற்கு அழைப்பு விடுத்து பெண்மனியை போன்றே பேசி வங்கி தகவல்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை தெரிந்து கொண்டுள்ளனர். 

mUhIgsq.jpg

சிம் கார்டு குளோனிங் என்பது புதிய வகை சைபர் குற்றமாகும். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் ஓட்டாண்டியாக கூடும். உங்களது தகவல்களை பயன்படுத்தி உங்களது பணம் முழுவதையும் ஹேக்கர்கள் எடுத்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

N8xs5QI.jpg

குறிப்பிட்ட மென்பொருள் மற்றும் சிம் கார்டு ரீடர் இருந்தால் போதும், அனைத்து தரவுகளையும் காலி சிம் கார்டில் பதிவு செய்திட முடியும். 

c0kEACm.jpg

இதனினை ஓடிஏ எனப்படும் ஓவர்-தி-ஏர் கமாண்ட் மூலம் பாதுகாக்கப்பட்ட குறுந்தகவல்களை கொண்டும் அனுப்ப முடியும். இதனினை தொழில்முறை ஹேக்கர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். 

Up7Aumz.jpg

உங்களது சிம் கார்டு குளோன் செய்யப்பட்டுள்ளதை கண்டறிய, உங்களது மாதாந்திர கட்டண ரசீதில் நீங்கள் மேற்கொண்ட அழைப்புகளை சரி பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

உங்களின் மாதாந்திர கட்டண ரசீதில் உங்களுக்கு தெரியாத நம்பர்களுக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் கோளாறு இருப்பதை அறிந்து கொள்ள முடியும். 

ஒருவேலை மற்றவர்கள் உங்களுக்கு அழைப்பு விடுத்தாலோ, அல்லது அழைப்பு விடுக்கும் போது உங்களது நம்பர் பிஸி டோன் வந்தாலும் உங்களது சிம் கார்டு குளோனிங் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.


9vBsCcd.jpg

சிம் கார்டு குளோனிங் செய்யப்படாமல் இருக்க, யாரிடம் மொபைல் போனினை வழங்குகின்றோம் என்பதை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களது மொபைல் போனினை அறிமுகம் இல்லாதவர்களிடம் வழங்குவதை தவிர்க்க வேண்டும். 

5XO6M2G.jpg

ஒரு வேலை கருவியில் பிரச்சனை ஏதும் இருப்பின் அங்கீகரிக்கப்பட்ட சரி செய்யும் மையங்களில் மட்டும் வழங்குவது வீண் பிரச்சனைகளை தவிர்க்க உதவும். மேலும் கருவிகளை வழங்கும் போது அதில் சிம் கார்டு இல்லாததை உறுதி செய்திட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் மொபைல் போனினை சரி செய்ய வழங்க வேண்டாம்.

7v05Ajl.jpg

உங்களுக்கு அறிமுகமில்லாத நம்பர்களில் இருந்த வரும்  அழைப்புகளை தவிர்க்க வேண்டும். 

ஒரு வேலை அறிமுகமில்லாத எண்களில் அழைப்புகளை ஏற்கும் பட்சத்தில் மறுமுனையில் யாரேனும் குறிப்பிட்ட நம்பர்களை அழுத்த கோரும் போது அழைப்பினை துண்டிப்பது நல்லது. நீங்கள் ஏதேனும் நம்பரை அழுத்தும் போது 

wGp6hp4.jpg

பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கி சேவைக்கென தனி சிம் கார்டு பயன்படுத்துவது நல்லது. இந்த நம்பரை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உங்களது தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்கும்.

jn29hdj.jpg

இது போன்ற ஊழல்களுக்கு மற்றவர்களை குறை கூறுவதை தவிர்த்து, ஊழல்களில் இருந்து காத்து கொள்வது மற்றும் இந்த தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதே அனைவருக்கும் சிறந்தது ஆகும்.
Read More