மாடிப்படி ஏறி இறங்கும் போது தவறி விழுந்து காலை உடைத்துக் கொண்டார் பாட்டி.
எலும்பு முறிவுச் சிகிச்சை நிபுணர் பாட்டிக்கு வைத்தியம் பார்த்தார்.
கட்டுப் போட்ட பிறகு பாட்டியிடம் சொன்னார்: "பாட்டி! இனிமேல் ஆறுமாசத்துக்கு மாடிப்படி ஏறக்கூடாது."
ஆறுமாசம் கழித்து டாக்டர் பாட்டியிடம் சொன்னார்: "பாட்டி! இனிமேல் நீங்கள் மாடிப்படி ஏறலாம். உங்கள் கால் நல்லா ஆயிடுச்சி!"
பாட்டி டாக்டரிடம் சொன்னார்: "அப்பாடா! இப்பவாவது சொன்னியே. எத்தனை நாளைக்குத் தான் நான் பைப் வழியா ஏறி இறங்குறது???".
"பாட்டீஈஈஈஈ" மயக்கம் போட்டு விழுந்தார் டாக்டர்.
படித்ததில் சிரித்தது.